தன்னம்பிக்கையை அதிகரிக்கும் புன்னகை


தன்னம்பிக்கையை அதிகரிக்கும் புன்னகை
x
தினத்தந்தி 2 Oct 2022 1:30 AM GMT (Updated: 2 Oct 2022 1:30 AM GMT)

ஹார்வே பால் என்ற ஓவியர் 1963-ல் ‘புன்னகை முகம்’ என்ற இமோஜியை அறிமுகப்படுத்தினார். 1999-ல் இருந்து உலகம் முழுவதும், ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 7) ‘உலகப் புன்னகை தினம்’ கொண்டாடப்படுகிறது.

புன்னகை, மனித உணர்வின் வெளிப்பாடு. இது புன்னகைப்பவருக்கும், அதைப் பார்ப்பவருக்கும் புத்துணர்வு, நேர்மறை ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையை கொடுக்கிறது. மனிதர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு புன்னகை. இதனால் அழகும், ஆரோக்கியமும் மேம்படும்.

ஹார்வே பால் என்ற ஓவியர் 1963-ல் 'புன்னகை முகம்' என்ற இமோஜியை அறிமுகப்படுத்தினார். 1999-ல் இருந்து உலகம் முழுவதும், ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 7) 'உலகப் புன்னகை தினம்' கொண்டாடப்படுகிறது. உலக மக்கள் அனைவருக்கும், மகிழ்ச்சியின் இன்பத்தை பரப்ப வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கமாகும்.

புன்னகை செய்ய எந்த வலுவான காரணமும் அவசியம் இல்லை. விளையாடும் குழந்தை, செல்லப்பிராணிகள், பூக்கள், மழை, வெயில் அடிக்கும்போது வீசும் குளிர்ந்த காற்று என சிறு சிறு நிகழ்வுகள் புன்னகைக்கு வழிவகுக்கும். சிறு புன்னகையின் மூலம் மனம் அமைதி அடையும். புன்னகைக்கும்போது முகத்தில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்பட்டு, எண்ண ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், எதிர்மறை உணர்வுகள் குறையும். நம்பிக்கை அதிகரிக்கும். சிறு புன்னகையின் மூலம் வாழ்வின் மகிழ்ச்சியை உணரலாம்.


Next Story