சோனியா காந்தியை 'விஷம் நிறைந்த பெண்' என விமர்சித்த பாஜக எம்.எல்.ஏ.


சோனியா காந்தியை விஷம் நிறைந்த பெண் என விமர்சித்த பாஜக எம்.எல்.ஏ.
x

சோனியா காந்தியை விஷம் நிறைந்த பெண் என பாஜக எம்.எல்.ஏ. விமர்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி,

கர்நாடக மாநிலம் பிஜபூர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. பசனகுடா படேல். இவர் தேர்தல் யத்நல் பகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. பசனகுடா கூறுகையில், ஒட்டுமொத்த உலகமும் பிரதமர் மோடியை ஏற்றுக்கொண்டுவிட்டது. ஒருகாலத்தில் பிரதமர் மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது. பின்னர், சிவப்பு கம்பளம் விரித்து பிரதமர் மோடியை வரவேற்கின்றனர்.

இப்போது காங்கிரசால் பிரதமர் மோடியை கோப்ரா பாம்புடன் ஒப்பிடுகின்றனர். பிரதமர் மோடி விஷத்தை கக்குகிறார் என்று கூறுகின்றனர். சோனியா காந்தி விஷம் நிறைந்த பெண்ணா? சீனா, பாகிஸ்தானுக்கு ஏஜெண்டாக இருந்து சோனியா காந்தி அவர்களுக்காக வேலை செய்கிறார்' என்றார்.

சோனியா காந்தியை விஷம் நிறைந்த பெண் என விமர்சித்த பாஜக எம்.எல்.ஏ.வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜக எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.


Next Story