ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை கருத்து: குஜராத் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கைது

குஜராத் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜேஷ் சோனி
காந்தி நகர்,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. 3 நாட்கள் நடந்த மோதல் இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. அதேவேளை, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விமர்சனம் செய்த நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜேஷ் சோனி. இவர் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்திய ராணுவம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ, புகைப்படங்களுடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக காந்தி நபர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட ராஜேஷ் சோனியை கைது செய்தனர்.






