மனைவி இரவு நேரத்தில் என் அருகில் இருந்ததை விட நாய்களுடன்தான் அதிகம்; கோர்ட்டில் கணவர் வினோத வழக்கு


மனைவி இரவு நேரத்தில் என் அருகில் இருந்ததை விட நாய்களுடன்தான் அதிகம்; கோர்ட்டில் கணவர் வினோத வழக்கு
x
தினத்தந்தி 13 Nov 2025 4:30 PM IST (Updated: 13 Nov 2025 5:29 PM IST)
t-max-icont-min-icon

தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தை காட்டி தன்னை வெறுப்பேற்றி உள்ளார்.

காந்திநகர்,

தெருநாய்கள் பிரச்சினையால் குஜராத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வாங்கி தாருங்கள் என கண்ணீர் வடித்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வருகிறார்.

'திருமணம் முடிந்த கொஞ்சநாளில் அவரது மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார்.

தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அதோடு அந்த நாய்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். இரவு நேரம் என் அருகில் தூங்கியதைவிட அந்த நாய்களுடன்தான் அதிக நேரம் தூங்கினார்.

மனைவியின் இந்த செயல் கணவரை எரிச்சல் படுத்தியது. பக்கத்தில் வசித்து வந்த பொதுமக்களும் அப்பெண் மீது போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் விலங்குகள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்த அவர் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டினார். இதனால் மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார். இருந்த போதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.மேலும் தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தை காட்டி தன்னை வெறுப்பேற்றுவதாகவும், இதன் காரணமாக மன அழுத்தத்தால் தனது ஆண்மை இழந்து விட்டதாகவும் அவர் புலம்ப ஆரம்பித்தார். கணவரும் போலீஸ் நிலையத்துக்கு அலைந்தார்.

இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அவர் தெரு நாய்களு டன் வாழ்க்கை நடத்திய மனைவியுடன் இனியும் குடும்பம் நடத்த முடியாது என கருதி தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக்கோரி ஆமதாபாத் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் உடனடியாக தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று கண்ணீர் வடித்துள்ளார்.

மனைவிக்கு ரூ.15 லட்சம் ஜீவனாம்சம் கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரது மனைவியோ கணவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் ரிசார்ட் நடத்தி வருவதால் தனக்கு ரூ.2 கோடி வேண்டும் என கேட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 1-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Live Updates

  • தமிழ்நாட்டில் 5.21 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கல்
    13 Nov 2025 5:29 PM IST

    தமிழ்நாட்டில் 5.21 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கல்

    தமிழ்நாட்டில் இன்று மதியம் 3 மணி வரை 81.37 சதவீதம் வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் விண்ணப்ப படிவங்கள் வழங்கியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில், இதுவரை 5.21 கோடி வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story