நோய் பாதிப்பால் படுத்த படுக்கையான 27 வயது மகள்... வேதனையில் தாய் செய்த கொடூர செயல்


நோய் பாதிப்பால் படுத்த படுக்கையான 27 வயது மகள்... வேதனையில் தாய் செய்த கொடூர செயல்
x

அனிதா குமாரியின் மகன் வழக்கம்போல் வேலைக்கு சென்றார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடப்பால் அருகே உள்ள கண்டனகம் பகுதியை சேர்ந்தவர் அனிதா குமாரி (வயது 57). இவரது மகள் அஞ்சனா (27). ஒரு மகனும் உள்ளார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உடல் நலக்குறைவால் அனிதா குமாரியின் கணவர் இறந்து விட்டார். அதன் பின்னர் அவர் தனது மகளை கவனித்து வந்தார்.

இதற்கிடையே அஞ்சனா, முதுகு தண்டுவட நோய் பாதித்து படுத்த படுக்கையாக இருந்தார். இந்தநிலையில் நேற்று அனிதா குமாரியின் மகன் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். வீட்டில் இருந்த அனிதா குமாரி, தனது மகளின் நிலையை எண்ணி மனமுடைந்து காணப்பட்டார். பின்னர் மகளை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, அஞ்சனாவை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்க வைத்து, மூச்சு திணறடித்து கொலை செய்தார்.

இதையடுத்து அனிதா குமாரி வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த எடப்பால் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தாய், மகள் ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மலப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணையில் நோய் பாதிப்பால் தனது மகளின் நிலையை கண்டு மனமுடைந்த தாய் மகளை கொன்று விட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story