இலவச கல்வி, 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு... பீகாரில் பாஜக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு


இலவச கல்வி, 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு... பீகாரில் பாஜக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
x
தினத்தந்தி 31 Oct 2025 11:32 AM IST (Updated: 31 Oct 2025 12:57 PM IST)
t-max-icont-min-icon

பீகார் தேர்தலுக்கான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று இருக்கிறது. ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர களப்பணியாற்றி வருகிறது.

நிதிஷ் குமாரிடம் இருந்து ஆட்சியை இந்த முறை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி. (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) - காங்கிரசின் மகா பந்தன் கூட்டணி இருக்கிறது.

கடந்த 28-ந்தேதி எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ‘பீகாருக்கு தேஜஸ்வியின் உறுதிமொழிகள்’ என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கையை கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இணைந்து வெளியிட்டனர்.

இந்த நிலையில் பீகார் தேர்தலுக்கான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து 69 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:-

  • ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
  • பீகாரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
  • பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
  • ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு KG முதல் PG வரை இலவச தரமான கல்வி வழங்கப்படும்.
  • விவசாயிகளுக்கு நிதியுதவி ரூ.6,000ல் இருந்து ரூ.9,000ஆக உயர்த்தப்படும்.
  • பீகார் பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும்.
  • உயர்கல்வி பயிலும் பட்டியலின மாணவர்களுக்கு மாதத்திற்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.
  • 4 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைகள் தொடங்கப்படும்.
  • பீகாரில் ஏழு சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
1 More update

Next Story