பா.ஜ.க. ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஒடிசா செல்லும் பிரதமர் மோடி

ஒடிசா முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த மோகன் சரண் மாஜி செயல்பட்டு வருகிறார்.
பாட்னா,
ஒடிசாவில் கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. மாநில முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த மோகன் சரண் மாஜி செயல்பட்டு வருகிறார். ஒடிசாவில் நவின் பட்நாயக் தலைமையிலான 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்து அம்மாநிலத்தில் முதல் முறையாக பா.ஜ.க. ஆட்சியமைத்தது. கடந்த ஆண்டு ஜுன் 12ம் தேதி பா.ஜ.க. அரசு பதவியேற்றது.
இந்நிலையில், ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சியின் முதலாமாண்டு விழாவை விமர்சையாக கொண்டாட பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இதற்காக வரும் 20ம் தேதி பிரமாண்ட நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பல தலைவர்கள் 20ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியியில் பங்கேற்கின்றனர். இதற்காக பிரதமர் மோடி 19ம் தேதி ஒடிசா செல்ல உள்ளார்.






