உ.பி.: குடும்ப தகராறில் மனைவியை அடித்து, தலைகீழாக தொங்க விட்ட கணவன்


உ.பி.:  குடும்ப தகராறில் மனைவியை அடித்து, தலைகீழாக தொங்க விட்ட கணவன்
x
தினத்தந்தி 18 May 2025 9:26 PM IST (Updated: 18 May 2025 9:37 PM IST)
t-max-icont-min-icon

நிதின், அவருடைய சகோதரர் அமித் உள்பட 4 பேருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பரேலி,

உத்தர பிரதேசத்தில் பரேலி நகரில் வசித்து வருபவர் நிதின் சிங். இவருடைய மனைவி டாலி (வயது 38). இந்த தம்பதிக்கு 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில், ஆத்திரமடைந்த நிதின் மனைவியை அடித்து, வீட்டின் மேற்கூரையில் தலைகீழாக தொங்க விட்டுள்ளார்.

இதனால், வலியால் துடித்த டாலி சத்தம் போட்டு கூச்சலிட்டு உள்ளார். இதனை கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடோடி வந்து, அவரை மீட்டுள்ளனர்.

இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு அனிஷ்கா வர்மா கூறும்போது, இந்த வழக்கில் நிதின், அவருடைய சகோதரர் அமித் சிங், அமித்தின் மனைவி மற்றும் நிதினின் தாயார் ஆகிய 4 பேருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

1 More update

Next Story