பெரிய அளவிலான மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம்


பெரிய அளவிலான மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம்
x

காரைக்காலில் தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவா்கள் 4 நாட்களுக்கு பிறகு கரை திரும்பினர். பெரிய அளவிலான மீன்கள் சிக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.

காரைக்கால்

காரைக்காலில் தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவா்கள் 4 நாட்களுக்கு பிறகு கரை திரும்பினர். பெரிய அளவிலான மீன்கள் சிக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.

மீன்பிடி தடைகாலம்

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்தது. அதன்பேரில், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, மண்டபத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 11 ஆயிரம் மீனவர்கள் கடந்த 61 நாட்களாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.

இந்தநிலையில் மீன்பிடித்தடை காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த 15-ந் தேதி அதிகாலை மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலில் தங்கியிருந்து மீன்பிடித்த அவர்கள் 4 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை கரை திரும்பினர்.

பெரிய மீன்கள் சிக்கவில்லை

கரை திரும்பிய மீனவர்கள் வலையில் பாறை, சூறை, வஞ்சரம், திருக்கை உள்ளிட்ட பெரிய அளவிலான மீன்கள் கிடைக்கவில்லை. இருந்தாலும் சிறிய அளவிலான சங்கரா, கிழங்கா, வரிபாறை, சுரும்பு, பன்னா, கானங்கெளுத்தி, மத்தி மற்றும் இறால்கள் உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன.

61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றதால் பெரிய அளவிலான மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மீனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மேலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் ஏராளமான மீன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் துறைமுகத்திற்கு மீன் வாங்க சென்றனர். ஆனால் போதுமான மீன்வரத்து இல்லாததால் அவர்களும் ஏமாற்றம் அடைந்தனர்


Next Story