மனைவி, மகள்களை விறகு கட்டையால் தாக்கிய தொழிலாளி கைது


மனைவி, மகள்களை விறகு கட்டையால் தாக்கிய தொழிலாளி கைது
x

கோட்டுச்சேரி அருகே மனைவி, மகள்களை விறகு கட்டையால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கோட்டுச்சேரி

திருபட்டினம் வெள்ள குல காலனித் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 43). கூலி தொழிலாளி. இவரது மனைவி கஜலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். குடித்து விட்டு வந்து மனைவியுடன் வடிவேல் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் சமையல் வேலைக்கு சென்று, அந்த வருமானத்தில் கஜலட்சுமி குடும்பம் நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் குடிபோதையில் வடிவேலு தனது மனைவியை திட்டியுள்ளார். இன்று காலை கஜலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டிய வடிவேல்,விறகு கட்டையால் அவரை தாக்கியுள்ளார். இதைப்பார்த்ததும் தடுக்க வந்த மகள்கள் மீதும் விறகு கட்டை அடி விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த கஜலட்சுமி திருபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் திருபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story