2 மனைவிகள் இருந்தும் 3-வதாக இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த 56 வயது அரசு பஸ் டிரைவர்


திருமணம் செய்த 56 வயது அரசு பஸ் டிரைவர்
x
தினத்தந்தி 11 July 2024 11:57 AM GMT (Updated: 11 July 2024 12:27 PM GMT)

தந்தை-மகள் வயதில் ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

திருச்சி,

ஐம்பதிலும் ஆசை வரும் என்ற சினிமா பாடலை மெய்ப்பிக்கும் விதமாக 56 வயது அரசு பஸ் டிரைவர் 20 வயது இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்த சம்பவம் திருச்சி அருகே நடந்துள்ளது. உனக்கு 20 எனக்கு 56 திருச்சி மாவட்டம் கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் பாஷா (வயது 56). இவர் துவரங்குறிச்சி அரசுப் போக்குவரத்து கழக பணி மனையில் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

இவர் மணப்பாறையில் இருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு செல்லும் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா கொண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

தந்தை-மகள் வயதில் ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. வயதை மீறிய காதல் டிரைவர் மற்றும் இளம்பெண்ணின் வீட்டாருக்கு தெரியாத நிலையில் 2 பேரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை சுல்தான் பாஷா கூத்தூர் பகுதிக்கு அழைத்து வந்துவிட்டார்.' இதனிடையே மகளை அழைத்து சென்று திருமணம் செய்த தகவல் அறிந்து கொண்டபாளையம் பகுதியில் இருந்து பெண்ணின் உறவினர்கள் கூத்தூருக்கு திரண்டு வந்தனர். பின்பு அவர்கள் சுல்தான் பாஷா பணிபுரியும் துவரங்குறிச்சி அரசுப் பேருந்து பணி மனையின் நுழைவுவாயில் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 வயது இளம்பெண்ணை மீட்டு தரக்கோரி அங்கிருந்த அதிகாரிகளிடமும் முறையிட்டனர்.

'இதனால் பணிமனையில் இருந்து பேருந்துகள் வெளியில் செல்ல முடியவில்லை. உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துவரங்குறிச்சி போலீசார் முற்றுகையில் ஈடுபட்ட இளம்பெண்ணின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.மேலும் பெண்ணின் ஊருக்கு அருகே உள்ள புழுதிப்பட்டி காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

இதனால் பெண்ணின் உறவினர்கள் அங்கிருந்து சென்றனர். அதன் பிறகு பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் பணி மனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே 2 மனைவிகள் உள்ள நிலையில் மகள் வயது உடைய இளம்பெண்ணை 56 வயது அரசு பஸ் டிரைவர் திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story