10-ம் வகுப்பு மாணவியை தியேட்டருக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி


10-ம் வகுப்பு மாணவியை தியேட்டருக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி
x
தினத்தந்தி 10 Oct 2024 10:56 AM IST (Updated: 10 Oct 2024 11:09 AM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு மாணவியை தியேட்டருக்கு அழைத்து சென்று தொழிலாளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பொட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் உத்திரகுமாரன், கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த வேலை காரணமாக கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வந்தார். பின்னர் அவர், விருத்தாசலம் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார்.

அப்போது, அங்கு 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர் பள்ளி சீருடை மற்றும் புத்தகப் பையுடன் நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த உத்திரகுமாரன், மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி விருத்தாசலத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு வைத்து மாணவிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

மாணவியை காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரின் மாணவியை போலீசார் தேடினர். இதையடுத்து மாணவியை உத்திரகுமாரன் வீட்டிற்கு அழைத்து வந்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உத்திரகுமாரனை பிடித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உத்திரகுமாரனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story