மருதமலையில் 160 அடி உயரத்தில் முருகன் சிலை - அமைச்சர் சேகர் பாபு தகவல்


மருதமலையில் 160 அடி உயரத்தில் முருகன் சிலை -  அமைச்சர் சேகர் பாபு தகவல்
x
தினத்தந்தி 28 Jan 2025 1:33 AM IST (Updated: 28 Jan 2025 12:04 PM IST)
t-max-icont-min-icon

திமுக ஆட்சியில், 90 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

கோவை,

கோயம்புத்தூரிலுள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து சுவாமி தரிசனம் செய்ய செல்கிறார்கள். இந்தநிலையில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதற்காக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

மருதமலை கோவில் அடிவாரத்தில் 160 அடி உயரத்தில் கல்லால் ஆன முருகன் சிலையை அமைக்க உள்ளோம். இது ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டது. இதற்கான ஆய்வு பணி தற்போது நடந்துள்ளது. முதல்-அமைச்சரின் அனுமதியோடு தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இது அமையும். மேலும் இந்த கோவிலில் வருகிற ஏப்ரல் மாதம் குடமுழுக்கு நடைபெற உள்ளது. திமுக ஆட்சியில், 90 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story