நெல்லையில் ஒரே நாளில் 6.15 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

நெல்லை மாநகரில் போதைப்பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள நடமாட்டம் குறித்து தங்களுடைய சுயவிவரங்கள் இன்றி DRUG FREE TN என்ற செயலி மூலம் புகாரளிக்கலாம்.
திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மேலப்பாளையம் பி.எஸ்.என்.எல். நகரை சேர்ந்த பசீர் மகன் முகமது உசேன் (வயது 27), சிவராஜபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராசப்பா(36) மற்றும் நேரு நகரை சேர்ந்த அகபர் அலி மகன் முகமது பாஷா(19) ஆகியோரிடம் இருந்து அரசால தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய கஞ்சா 4.350 கிலோ கிராம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
மேலும் இதேபோல் திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி அவர்கள் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவனந்தபுரம் ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பேக்கரி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்த அப்துல்ஹமீது மகன் சாகுல் ஹமீது பாதுஷா(33) என்பவரை விசாரித்து, சோதனை செய்ததில் அவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய 1.800 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் திருநெல்வேலி மாநகரத்தில் 6.15 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் ைகது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாநகரத்தில் போதைப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள நடமாட்டம் குறித்து தங்களுடைய சுயவிவரங்கள் இன்றி DRUG FREE TN என்ற செயலி மூலம் புகாரளிக்கலாம் என்று திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






