ஈரோட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு


ஈரோட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
x

"இரட்டை என்ஜின் என்ற டப்பா என்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஈரோடு,

மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசும் போது, "தமிழகத்துக்கு இரட்டை என்ஜின் ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது" என்று கூறினார். அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "இரட்டை என்ஜின் என்ற டப்பா என்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது", என்று விளக்கம் அளித்தார். இந்த வாசகங்கள் பேசும் பொருளாக மாறியது.

இந்தநிலையில் ஈரோட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் "டபுள் என்ஜின் டப்பா என்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது, அடிமைகளை விரட்டுவோம் தமிழ்நாட்டை காப்போம்" ஆகிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், பழைய ரெயில் என்ஜினில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் படங்களும் அச்சடிக்கப்பட்டுள்ளன. ஈரோடு பஸ் நிலையம், ஈ.வி.கே. சம்பத் ரோடு, பெருந்துறை ரோடு உள்பட மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளன.

1 More update

Next Story