திருச்சி - ராஜஸ்தான் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு


திருச்சி - ராஜஸ்தான் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
x

கோப்புப்படம் 

ஜோத்பூர் - திருச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

சென்னை

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

ரெயில்களில் கூட்ட நெரிசலை குறைக்க வட மேற்கு ரெயில்வே 2 ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் - திருச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 22497/22498) செப்டம்பர் 1-ந்தேதி முதல் அக்டோபர் 3-ந்தேதி வரை தற்காலிகமாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது.

இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் - திருச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (20481/20482) செப்டம்பர் 3-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story