தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறியது: பொதுமக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் அவதி


தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறியது: பொதுமக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் அவதி
x

மணலியில் தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் முகத்தில் துணியை கட்டி கொண்டு தொழிற்சாலையை கடந்து சென்றனர்.

சென்னை

சென்னை மணலியில் மத்திய அரசுக்கு சொந்தமான உர தொழிற்சாலை உள்ளது. நேற்று இரவு இந்த தொழிற்சாலை அருகே உள்ள ரவுண்டானா சாலையில் வாகனத்தில் சென்ற பொதுமக்களுக்கு அம்மோனியா வாயு துர்நாற்றம் காரணமாக கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது.

இதனால் பீதி அடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் முகத்தை துணியால் மூடிக்கொண்டு தொழிற்சாலையை கடந்து சென்றனர். மேலும் ரவுண்டானா சந்திப்பில் பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசாருக்கும் மூச்சுத்திணறல் காரணமாக முகத்தில் துணியை கட்டிக்கொண்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த அமோனியா வாயு நெடி சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது.

இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உர தொழிற்சாலையில் பயன்படுத்தப்டும் அமோனியா மூலப்பொருள், புகை போக்கி வழியாக அதிகப்படியாக வெளியேறியதால் அம்மோனியா வாயு காற்றில் பரவி பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திது.

1 More update

Next Story