ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு ஒரு வாய்ப்பு - குஷ்பு


ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு ஒரு வாய்ப்பு - குஷ்பு
x

சில தலைவர்கள்(மோடி, நிதீஷ்) வெற்றி பெறுவதற்காகவே பிறந்துள்ளனர் என்று குஷ்பு கூறியுள்ளார்.

சென்னை,

பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம், சிராக் பாஸ்வானின் லோக்ஜன் சக்தி உள்ளிட்ட கட்சிகள் தேஜ கூட்டணியில் போட்டியிட்டன. இதில் மற்ற அனைத்து கட்சிகளையும் விட, பாஜகவின் வெற்றி- முன்னிலை சதவீதம் அதிகமாக இருப்பது, அக்கட்சியினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இந்தியா கூட்டணி பின்னடைவை சந்தித்து வருகிறது.

இந்தநிலையில், ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு காரணமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது என்று தமிழக பாஜக துணைத்தலைவர் குஷ்பு கூறியுள்ளார்.

இந்நிலையில் பீகார் தேர்தல் முடிவுகள் குறித்துப் பதிவிட்டுள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு, பிரதமர் மோடி மற்றும் பிகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் இணைந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "வெற்றி பெற என்ன தேவை என்பதை அவர்கள் காட்டிவிட்டார்கள்.

காங்கிரஸ் படுதோல்வி அடைந்துவிட்டது. ராகுல் காந்தி அரசியலைவிட்டு விலக மற்றுமொரு வாய்ப்பும் காரணமும் இது என அதில் பதிவிட்டுள்ளார். மற்றுமொரு பதிவில், 'தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றுவிட்டது. சில தலைவர்கள்(மோடி, நிதீஷ்) வெற்றி பெறுவதற்காகவே பிறந்துள்ளனர். மக்களுக்கு ஆற்றிய சேவை அவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story