மே 7, 8-ம் தேதிகளில் விளையாட்டு விடுதிகளுக்கான மாணவ, மாணவியர்கள் சேர்க்கை- அறிவிப்பு


மே 7, 8-ம் தேதிகளில் விளையாட்டு விடுதிகளுக்கான மாணவ, மாணவியர்கள் சேர்க்கை- அறிவிப்பு
x

மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய மே 5-ம் தேதி கடைசி நாள் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை

2025-2026-ம் ஆண்டு விளையாட்டு விடுதிகளுக்கான மாணவ, மாணவியர்கள் சேர்க்கை தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர், இளைஞர் நலன் இயக்குநர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துைறயில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன்கூடிய விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் 17.4.2025 முதல் www.sdat.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7, 8, 9 மற்றும் 11 ஆகிய வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் 5.5.2025 அன்று மாலை 5 மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசியினை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரத்தினை பெற்றுக்கொள்ளலாம். விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகின்ற 7.5.2025 அன்று காலை 7 மணியளவில் ஆண்களுக்கும், 8.5.2025 அன்று காலை 7 மணியளவில் பெண்களுக்கும் கீழ்காணும் விபரப்படி நடைபெற இருப்பதால் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான தகவல்கள் குறுஞ்செய்தி, வாட்ஸ்ஆப் மூலமாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

தடகளம் (Athletics), கூடைப்பந்து (Basketball), கால்பந்து (Football), வளைகோல்பந்து (Hockey), கபாடி (Kabaddi), கையுந்துபந்து (Volleyball) ஆகிய 6 வகையான விளையாட்டுக்களில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், மாணவியர்கள் என இருபாலரும் (Both Boys & Girls) மற்றும் கிரிக்கெட் (Cricket) விளையாட்டில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் (Boys only) ஆகியோர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அந்தந்த மாவட்ட விளையாட்டு அரங்கங்களில் முறையே ஆண்களுக்கு 7.5.2025 காலை 7 மணி, பெண்களுக்கு 8.5.2025 காலை 7 மணி என்றவாறு மாவட்ட அளவிலான தேர்வுகள் நடைபெறும். மாவட்ட அளவிலான தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தகுதி பெறுவர். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் கீழ்காணும் விளையாட்டுகளுக்கு நேரடியாக மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 12.5.2025 அன்று பின்வரும் விவரப்படி நடைபெறும்.

வாள்விளையாட்டு (ஆ & பெ) Fencing (Both Boys & Girls), ஜூடோ (ஆ & பெ) Judo (Both Boys & Girls), குத்துச்சண்டை (ஆ) Boxing (Boys) ஆகிய 3 விளையாட்டுகளுக்கு சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் 12.5.2025 காலை 7 மணிக்கு மாநில அளவிலான தேர்வுகள் நடைபெறும்.

பளுதூக்குதல் (ஆ) & (பெ) Weightlifting (Both Boys & Girsl), வுஷூ (ஆண்கள் மட்டும்) Wushu (Boys) ஆகிய 2 விளையாட்டுகளுக்கு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் 12.5.2025 காலை 7 மணிக்கு மாநில அளவிலான தேர்வுகள் நடைபெறும். நீச்சல் விளையாட்டுக்கு (ஆ) & (பெ) Swimming (Both Boys & Girls) சென்னை, வேளச்சேரி, AGM Complex-ல் 12.5.2025 காலை 7 மணிக்கு மாநில அளவிலான தேர்வுகள் நடைபெறும். குத்துச்சண்டை (பெ) Boxing (Girls), ஸ்குவாஷ் (ஆண்கள் மட்டும்) Squash (Boys) ஆகிய 2 விளையாட்டுகளுக்கு சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் 12.5.2025 காலை 7 மணிக்கு மாநில அளவிலான தேர்வுகள் நடைபெறும். கைபந்து விளையாட்டுக்கு (ஆ) & (பெ) Handball (Both Boys & Girls) திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் 12.5.2025 காலை 7 மணிக்கு ஆண்களுக்கும், 13.5.2025 காலை 7 மணிக்கு பெண்களுக்கும் மாநில அளவிலான தேர்வுகள் நடைபெறும்.

மல்யுத்தம் (ஆண்கள் மட்டும்) Wrestling (Boys), டேக்வாண்டோ (ஆ) & (பெ) Taekwondo (Boys & Girls) ஆகிய 2 விளையாட்டுகளுக்கு கடலூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 12.5.2025 காலை 7 மணிக்கு மாநில அளவிலான தேர்வுகள் நடைபெறும். மல்லர்கம்பம் விளையாட்டுக்கு (ஆண்கள் மட்டும்) Mallakhamb (Boys) விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 12.5.2025 காலை 7 மணிக்கு மாநில அளவிலான தேர்வுகள் நடைெபறும்.

விளையாட்டுத் தகுதிகள்:

தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாவட்ட, மாநில அளவில் குடியரசு/ பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள்/ அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். (அல்லது) தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள்/ இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI)/ இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும், பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர்களும் மற்றும் கலந்து கொண்டவர்களும் மாவட்ட, மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story