குப்பை கொட்ட எதிர்ப்பு: மாநகராட்சியை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்


குப்பை கொட்ட எதிர்ப்பு: மாநகராட்சியை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
x

திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள பாறைக்குழியில், குப்பை கொட்டுவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளை கொண்டதாகும். இங்கு தினமும் 800 டன் குப்பைகள் சேகரமாகிறது. திருப்பூரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முதலிபாளையத்தில் உள்ள பாறைக்குழியில், குப்பை கொட்டுவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த குழுவினர் பாய், தலையணையுடன் மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நேற்று நடத்துவதாக அறிவித்தனர்.

அதன்படி நேற்று காலை வாகனங்களில் முதலிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவை சேர்ந்த ஆண்களும், பெண்களும் பாய், தலையணையுடன் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் மாநகராட்சி முன்பு சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 90 பெண்கள் உள்பட 150 பேரை தெற்கு போலீசார் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.

1 More update

Next Story