நெல்லை-புருலியா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்


நெல்லை-புருலியா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
x
தினத்தந்தி 14 Nov 2025 8:52 PM IST (Updated: 14 Nov 2025 8:52 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை-மேற்குவங்க மாநிலம் புருலியா இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் இலகுரக பெட்டியாக மாற்றப்படுகிறது.

சென்னை,

நெல்லையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் புருலியாவுக்கு வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில், நெல்லையில் இருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு புறப்படும். இந்த நிலையில், நெல்லை-புருலியா இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் இலகுரக பெட்டியாக மாற்றப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

”பயணிகளின் வசதிக்காக நெல்லை-மேற்குவங்க மாநிலம் புருலியா இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் இலகுரக பெட்டியாக மாற்றப்படுகிறது. அதன்படி, நெல்லையில் இருந்து புருலியா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22606) அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி முதல் இலகுரக பெட்டியாக மாற்றப்பட்டு இயக்கப்படும். அதே போல, புருலியாவில் இருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22605) அடுத்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி முதல் இலகுரக பெட்டியாக மாற்றப்பட்டு இயக்கப்படும். ”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

1 More update

Next Story