தி.மு.க. உருட்டு கடை அல்வா: காலி பாக்கெட்டை காட்டிய எடப்பாடி பழனிசாமி


தி.மு.க. உருட்டு கடை அல்வா: காலி பாக்கெட்டை காட்டிய எடப்பாடி பழனிசாமி
x

திமுக அரசாங்கத்தில் உருட்டு கடை அல்வாதான் கிடைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் பேட்டியளிக்கும்போது, "2021ஆம் ஆண்டில் தீபாவளியின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்; அதில் 10 சதவீத அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. ; அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார்" என்று கூறி, தி.மு.க. உருட்டு கடை அல்வா என்ற பெயரிலான காலி பாக்கெட்டுகளை பத்திரிகையாளர்கள் மத்தியில் காட்டினார்.

அ.தி.மு.க. உறுப்பினர்களும் அதைபோல் காலி அல்வா பாக்கெட்டுகளை கையில் வைத்திருந்தனர். பத்திரிகையாளர்கள் அதை கேட்டதும், எல்லாத்துக்கும் கொடுங்கப்பா என்று காலி அல்வா பாக்கெட்டுகளை எடப்பாடி பழனிசாமி ஆர்வமாக கொடுத்தார். இதனால், சட்டசபைக்கு வெளியே சிரிப்பலை எழுந்தது.

1 More update

Next Story