ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெற்றியை உறுதி செய்த தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
Live Updates
- 8 Feb 2025 9:28 AM
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வெற்றியை உறுதி செய்த தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் வெற்றியை உறுதி செய்துள்ளார். அவர் 75,350 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி 16,123 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இதனால், தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 59,227 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
- 8 Feb 2025 8:48 AM
நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம் - தி.மு.க. வேட்பாளர் விமர்சனம்
வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் தி.மு.க.வுக்கு வாக்களித்துள்ளனர். திமுக யாரைக் கண்டும் அஞ்சியதில்லை.. அஞ்சுவதில்லை..” என்று அவர் கூறினார்.
தற்போதய முன்னனி நிலவரம்:-
திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 63,984 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 13,945 வாக்குகள்
- 8 Feb 2025 8:19 AM
10-வது சுற்று முன்னணி நிலவரம்: 63,984 வாக்குகளுடன் தி.மு.க. முன்னிலை
வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 63,984 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 13,945 வாக்குகள்
நோட்டா - 2,940 வாக்குகள்
- 8 Feb 2025 8:14 AM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 9-வது சுற்று முடிவுகள்
51,272 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 64,710 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 13,438 வாக்குகள்
- 8 Feb 2025 7:57 AM
8-வது சுற்று முடிவில் 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் முன்னிலை
43,887 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 55,910 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 12,023 வாக்குகள்
- 8 Feb 2025 7:50 AM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஏழாவது சுற்று முடிவுகள்
38,725 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 49,312 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 10,587 வாக்குகள்
- 8 Feb 2025 7:38 AM
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 6-வது சுற்று முடிவுகள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 43,427 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 9,152 வாக்குகள்
நோட்டா - 1,982 வாக்குகள்
- 8 Feb 2025 7:27 AM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 51 ஆயிரம் வாக்குகளுடன் தி.மு.க. முன்னிலை
இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 51,650 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 10,897 வாக்குகள்
- 8 Feb 2025 6:46 AM
இடைத்தேர்தலில் வெற்றி உறுதியானது: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தொண்டர்கள் கொண்டாட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதை கொண்டாடும் வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 38,428 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 7,791 வாக்குகள்
- 8 Feb 2025 6:42 AM
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 3-வது சுற்றுகள் முடிவுகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 3-வது சுற்றுகள் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி
திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 22,682 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 4,032 வாக்குகள்
நோட்டா - 775 வாக்குகள்