மதுரையில் போலி மாநகராட்சி அதிகாரி கைது

மதுரையில் ஒருவர், மாநகராட்சி அதிகாரி எனக்கூறி பாதாள சாக்கடை பணிக்காக மாநகராட்சிக்கு ரூ.2,500 கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறி வீடுதோறும் பணம் வசூலில் ஈடுபட்டுள்ளார்.
மதுரை
மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவர் திருப்பாலை ஸ்ரீகிருஷ்ணா நகர் பகுதிக்கு சென்று, அங்குள்ள மக்களிடம் தன்னை மாநகராட்சி அதிகாரி என அறிமுகப்படுத்தி பாதாள சாக்கடை பணிக்காக மாநகராட்சிக்கு ரூ.2,500 கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறி, வீடுதோறும் பணம் வசூலில் ஈடுபட்டார். இதுதொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து அவர் கைதானார். விசாரணையில் அவர் மாநகராட்சியில் பணியாற்றவில்லை என்பதும், வசூல் பணத்தை ஆடம்பரமாக செலவழித்ததும் தெரியவந்தது.
Related Tags :
Next Story






