தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் திடீர் தர்ணா போராட்டம்


தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் திடீர் தர்ணா போராட்டம்
x

தூத்துக்குடியில் விடுதி பழுதடைந்துள்ளதாக கூறி, அதை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி எஸ்.எப்.ஐ. சார்பில் 30 மாணவர்கள் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி, கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள அரசு மாணவர் விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களுக்கு கழிப்பறை, குடிநீர் வசதிகளை மேம்படுத்த வேண்டும், விடுதி மிகவும் பழுதடைந்து உள்ளதாகவும் கூறி அதை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி எஸ்.எப்.ஐ. சார்பில் 30 மாணவர்கள் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் மற்றும் கோரம்பள்ளம் ஐ.டி.ஐ. முதல்வர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களில் சரி செய்து தந்து விடுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து தர்ணா போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

1 More update

Next Story