நெல்லையில் மனைவியை தாக்கிய கணவன் கைது


நெல்லையில் மனைவியை தாக்கிய கணவன் கைது
x

சுடலைமணி சமுத்திரக்கனியை அவதூறாக பேசி அவரை பெண் என்றும் பாராமல் கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேட்டுப்பிராஞ்சேரி, அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுடலைமணி (வயது 57) என்பவரும் சமுத்திரகனி (47) என்பவரும் கணவன் மனைவி ஆவர். சுடலைமணி சமுத்திரகனியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு பிரச்சினை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 27.04.2025 அன்று சமுத்திரகனி வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சுடலைமணி சமுத்திரகனியை அவதூறாக பேசி அவரை பெண் என்றும் பாராமல் கையால் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து சமுத்திரகனி கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுடலைமணியை நேற்று முன்தினம் (28.4.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

1 More update

Next Story