ராமதாசுக்கு ஏதாவது ஆனால் சும்மா விடமாட்டேன் - அன்புமணி ஆவேசம்


ராமதாசுக்கு ஏதாவது ஆனால் சும்மா விடமாட்டேன் - அன்புமணி ஆவேசம்
x
தினத்தந்தி 10 Oct 2025 5:44 PM IST (Updated: 10 Oct 2025 6:01 PM IST)
t-max-icont-min-icon

ராமதாஸ் உடன் இருப்பவர்கள் அவரை வைத்து நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை

சென்னையை அடுத்த உத்தண்டியில் பா.ம.க.வின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் மத்தியில் பேசிய அன்புமணி ராமதாஸ் "87 வயதை எட்டியதால் சராசரி பரிசோதனைக்கு மருத்துவமனை சென்று இருக்கும் ஐயாவை பாதுகாப்பே இல்லாமல் யார் யாரோ சென்று பார்க்கின்றனர். வீட்டில் இருக்கும்போது ஐயாவின் பாதுகாப்பு கருதி வராண்டாவை தாண்டி யாரையும் அனுமதிக்க மாட்டேன்.

ராமதாஸ் என்ன காட்சி பொருளா? அவர் நன்றாக இருக்கிறார். உடன் இருப்பவர்கள் அவரை வைத்து நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு ஏதாவது ஆனால் உடன் இருப்பவர்களை தொலைத்து விடுவேன். அவர்களை சும்மா விட மாட்டேன்" என்று ஆவேசமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "கட்சிப் பணிகளை விரைந்து செயல்படுத்துங்கள். 20 நாள் கால அவகாசம் தருகிறேன்" என்றார். இந்த கூட்டத்தில், பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவராக முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் நியமிக்கப்பட்டார்.

1 More update

Next Story