பீகார் தேர்தலில் நீதி வெல்ல வேண்டும்; ஜனநாயகம் வெல்ல வேண்டும் - கனிமொழி பேட்டி

தமிழ்நாட்டில் யாருடைய வாக்குரிமையையும் பறிக்கக்கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
நெல்லை,
நெல்லையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மத்திய அரசின் ஆய்வு குழு இந்த முறையாவது மாநில அரசு கேட்கும் நிவாரணத்தை வழங்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தமிழக முதல்-அமைச்சர் கேட்கும் நிவாரணத்தை கொடுக்காமல் மத்திய அரசு கிள்ளிக் கொடுக்கிறது. விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிவாரணம் கிள்ளிக் கொடுப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
விவசாயிகளின் துன்பத்தையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாத வகையில் நிவாரணத்தை வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கு உண்மையிலேயே உதவி செய்யக்கூடிய எண்ணத்தோடு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பீகார் தேர்தலை பொறுத்திருந்து பார்ப்போம், நீதி வெல்ல வேண்டும், ஜனநாயகம் வெல்ல வேண்டும் என்பதுதான் அத்தனை பேரின் எதிர்பார்ப்பு. சிறப்பு திருத்தத்தால் தமிழகத்தில் வாக்குரிமை பறிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






