கள்ளக்குறிச்சி: ரெயிலில் ஏறி செல்பி எடுத்த மாணவன் மின்சாரம் தாக்கி பலி


கள்ளக்குறிச்சி: ரெயிலில் ஏறி செல்பி எடுத்த மாணவன் மின்சாரம் தாக்கி பலி
x

கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் ரெயில், விழுப்புரம் நோக்கி செல்ல சிக்னலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளூந்தூர்பேட்டை அமச்சார் கோயில் தெருவை சோர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 16). உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சதீஷ்குமார் தனது நண்பர்களுடன் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை ரெயில் நிலையத்திற்கு சென்றார். அங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் ரெயில் விழுப்புரம் நோக்கி செல்ல சிக்னலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த ரெயில் மீது ஏறி நின்று தனது செல்போனில் சதீஷ்குமார் செல்பி எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை, மேலே சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பியில் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி சதீஷ்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story