திமுக கூட்டணி மாபெரும் வெற்றி வாகை சூடிட உழைப்போம்: கனிமொழி எம்.பி.


திமுக கூட்டணி மாபெரும் வெற்றி வாகை சூடிட உழைப்போம்: கனிமொழி எம்.பி.
x

இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடுவோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள். மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “2019-ம் ஆண்டு முதல், நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும், மகத்தான வெற்றிகளை பெற்று வருகிறோம். நம்முடைய வெற்றிகள், எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2026 தேர்தலிலும் நாம்தான் வெற்றிபெற போறோம். அன்றைக்கு தலைப்புச் செய்தி, “திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது!” என்பதுதான். இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. உங்கள் உழைப்பு மீதும், ஆட்சியின் சாதனைகள் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் வைத்திருக்கிற நம்பிக்கையில் சொல்கிறேன்” என்று கூறினார்.

இந்த நிலையில், இதுகுறித்து திமுக எம்.பி.கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்று மாமல்லபுரத்தில், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் தலைமையில் நடைபெற்ற ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக் கூட்டத்தில் பங்கேற்றேன். பாசிச பாஜக அரசின் எஸ்.ஐ.ஆர். (SIR) என்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்து, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நம் தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றி வாகை சூடிட உழைப்போம் என உறுதியேற்றோம். மக்களாட்சியால் உருவான ஒன்றுபட்ட இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story