பயணிகள் முன்பதிவு குறைவு: 6 சிறப்பு ரெயில்கள் ரத்து

குறைவான பயணிகளே டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதால் 6 சிறப்பு ரெயில்களை தென்மேற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
குறைவான பயணிகளே டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதால் மைசூருவில் இருந்து இயக்கப்படும் 6 சிறப்பு ரெயில்களை தென்மேற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.
மைசூரு - நெல்லை இடையே திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06239/06240) வரும் 27-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 25-ந் தேதி வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், மைசூரு - காரைக்குடி (30-ந் தேதி முதல் நவம்பர் 29-ந் தேதி வரை) இடையே வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06243/06244) ரத்து செய்யப்படுகிறது.
மேலும், மைசூரு - ராமேஸ்வரம் இடையே வரும் 27, 28-ந் தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06237/06238) ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






