நெல்லையில் கேட்பாரற்று கீழே கிடந்த பணம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு: எஸ்.பி. பாராட்டு


நெல்லையில் கேட்பாரற்று கீழே கிடந்த பணம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு: எஸ்.பி. பாராட்டு
x

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே அடையாளம் தெரியாத நபர் விட்டு சென்ற ரூ.19,900 பணம் கீழே கேட்பாரற்று கிடந்துள்ளது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே கடந்த 25.09.2025 அன்று அடையாளம் தெரியாத நபர் விட்டு சென்ற ரூ.19,900 பணம் கீழே கேட்பாரற்று கிடந்துள்ளது. அந்த பணத்தை பணகுடியை சேர்ந்த பிரவீன் ராஜா (வயது 32) என்பவர் எடுத்து உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் பணகுடி காவல் நிலையத்திற்கு வந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமிடம் நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், பிரவீன் ராஜாவை இன்று (6.11.2025) நேரில் அழைத்து அவருடைய நேர்மையை பாராட்டும் வகையில் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கவுரவித்தார்.

1 More update

Next Story