10 பேருக்கு சீருடையில் அணியும் நவீன கேமரா: நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வழங்கல்


10 பேருக்கு சீருடையில் அணியும் நவீன கேமரா: நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வழங்கல்
x

காவலர்கள் சீருடையில் அணியும் நவீன கேமராவானது வாகன தணிக்கை, ரோந்து அலுவலின் போது நடைபெறும் சம்பவங்களை பதிவு செய்து, வழக்கு விசாரணைக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரத்தில் 8 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்நிலையங்கள் மற்றும் 2 போக்குவரத்து காவல் நிலையங்களில் ரோந்து பணி, போக்குவரத்து சீர் செய்யும் பணி, வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் அதிகாரிககள் மற்றும் காவலர்ளுக்கு சீருடையில் அணியக்கூடிய 10 Body Worn Camera-க்களை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் மதன் (மேற்கு), வினோத் சாந்தாராம் (கிழக்கு) ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கேமராவானது வாகன தணிக்கை செய்யும் போதும் ரோந்து அலுவலின் போதும், நடைபெறும் சம்பவங்களை பதிவு செய்து, வழக்கு விசாரணைக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

1 More update

Next Story