டெல்லியில் ஆம் ஆத்மியை மக்கள் நிராகரித்துள்ளனர் - மத்திய இணைமந்திரி எல்.முருகன்

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று மத்திய இணைமந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மத்திய இணை மந்திரி எல். முருகன் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள, டெல்லி மாநில பாரதிய ஜனதா கட்சியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டெல்லி மாநில மக்களிடத்தில் பொய்யுரைகளை கட்டவிழ்த்து,10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை மக்கள் முழுமையாக நிராகரித்துள்ளார்கள் என்பதற்கும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






