தருமபுரியில் நாளை பாமகவின் மக்கள் உரிமை மீட்புப் பயண நிறைவு விழா

திருப்போரூரில் தொடங்கிய 108 நாள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் தருமபுரியில் நாளை நிறைவடைகிறது.
தருமபுரி,
திமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த ஜூலை 25-ஆம் நாள் சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கிய 108 நாள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் தருமபுரியில் நாளை நிறைவடைகிறது.
இதையொட்டி தருமபுரி வள்ளலார் திடலில் நாளை மாலை 4.00 மணிக்கு தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயண நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு, உரையாற்ற உள்ளனர்.
Related Tags :
Next Story






