தூத்துக்குடியில் காவல் துறையினர் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு


தூத்துக்குடியில் காவல் துறையினர் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
x

இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தூத்துக்குடி

இன்று (26.11.2025) இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் பின்வருமாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும் சமநலச் சமுதாயமும் சமயசார் பிரச்சினையின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசு நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும், சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், தென் வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படி நிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும், தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய், நம்முடைய அரசமைப்புப் பேரவையில், 1949 நவம்பர் 26ம் நாளாகிய இன்று ஈங்கிதனால் இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. தீபு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி. ஜமால் உட்பட காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

1 More update

Next Story