பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கம்

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரத்தில் இருந்து நாளை காலை 10.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.
சென்னை
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
விழுப்புரத்தில் இருந்து நாளை (3-ந் தேதி) காலை 10.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரத்தை சென்றடையும்.
8 பெட்டிகளை கொண்ட மெமு சிறப்பு ரெயிலான இது வெங்கடேசபுரம், மாம்பலப்பாடு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அந்தம்பலம், தண்டறை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






