மோசமான வானிலை: பெங்களூரு விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்


மோசமான வானிலை: பெங்களூரு விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்
x

பெங்களூருவில் இன்று கனமழை பெய்து வருகிறது.

சென்னை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

மேலும், மோசமான வானிலை நிலவுவதால் பெங்களூருவில் தரையிறங்கவேண்டிய 6 விமானங்கள் சென்னையில் தரையிறங்கின.

அதன்படி, மலேசியா, தாய்லாந்து, டெல்லி, உத்தரபிரதேசம் ஜார்க்கண்ட், குஜராத் ஆகிய இடங்களில் இருந்து வந்த விமானங்கள் மோசமான வானிலையால் பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூருவில் தரையிறங்காமல் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானங்கள் மீண்டும் வானிலை சீரானதும் பெங்களூரு புறப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story