நவம்பர் 22ம் தேதி நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வரும் நவம்பர் 22ம் தேதி ஆண்கள் 60 பேர், பெண்கள் 5 பேர் என மொத்தம் 65 பேர் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
திருநெல்வேலி மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி திருநெல்வேலி மாநகர ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படையினர் (Home Guards) புதிதாக தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்காக பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து வரும் 22.11.2025, சனிக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை ஆண்கள் 60 பேர் மற்றும் பெண்கள் 5 பேர் என மொத்தம் 65 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பின்வரும் ஆவணங்களுடன் பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகுதிகள்:
1. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. 18 வயதிற்கு குறையாமலும் 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
3. திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் குடியிருக்க வேண்டும்.
கொண்டு வர வேண்டிய ஆவனங்கள்:
1. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2 (கலர்).
2. கல்வித் தகுதிச் சான்று (அசல் மற்றும் நகல்).
3. ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்).
4. இருப்பிடச் சான்று (அசல் மற்றும் நகல்) ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.






