சஷ்டி விழா: தாம்பரம் - திருநெல்வேலி இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கம்

இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று இரவு 8 மணி முதல் தொடங்கும்.
சென்னை,
திருச்செந்தூரில் சஷ்டி விழாவின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்புரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
- தாம்பரத்தில் இருந்து (வண்டி எண்: 06135) நாளை (26 அக்டோபர்) இரவு 10.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 8 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
- மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து (வண்டி எண்: 06136) நாளை மறுநாள் (27 அக்டோபர்) இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அடுத்த நாள் காலை 8 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
ரெயில் அமைப்பு: 1 - ஏசி அமரும் வசதிகொண்ட பெட்டி, 11 - அமரும் வசதிகொண்ட பெட்டி, 4 - பொது வகுப்பு பெட்டி
இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று இரவு 8 மணி முதல் தொடங்கும்.
Related Tags :
Next Story






