சோனியா காந்தி பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சோனியா காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை,

காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று தன்னுடைய 79-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

"காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது வாழ்க்கை தியாகம், தன்னலமற்ற பொதுப் பயணம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான உறுதியான உறுதி ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. இந்தியாவிற்கான நமது கூட்டு முயற்சிகளை அவரது கொள்கை ரீதியான பாதையும் வழிகாட்டுதலும் தொடர்ந்து வலுப்படுத்தட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com