கன்னியாகுமரியில் சட்ட விரோதமாக செயல்பட்ட கல்குவாரியில் எஸ்.பி. ஆய்வு: மேற்பார்வையாளர் கைது; 2 காவலர்கள் இடமாற்றம்

சட்ட விரோதமாக செயல்பட்ட கல்குவாரி தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கடையாலுமூடு காவல் நிலைய காவலர்கள் 2 பேரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம், களியல் அருகே கட்டச்சல் பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரியை முன்னாள் மாவட்ட கலெக்டர் நாகராஜன் மேற்கொண்ட நடவடிக்கையால் மூடப்பட்டது. இந்த நிலையில் செயல்படாமல் இருந்த அந்த கல்குவாரி, கன்னியாகுமரியை சேர்ந்த குவாரி உரிமையாளர் ஒருவர் மூலம் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.
பாறைகள் உடைக்க அனுமதி இல்லாத நிலையில் சட்ட விரோதமாக பாறைகள் உடைப்பதாக புகார் எழுந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், அந்த கல்குவாரியில் அதிரடியாக சோதனை நடத்தினார். அந்த சோதனையில் கல்குவாரியின் மேற்பார்வையாளர் ஸ்டாலின் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கடையாலுமூடு காவல் நிலையத்தை சேர்ந்த இரண்டு காவலர்களை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தும் எஸ்.பி. உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story






