தமிழ்நாட்டின் மீதான மத்திய அரசின் வஞ்சகம் கண்டிக்கத்தக்கது - சு.வெங்கடேசன்


தமிழ்நாட்டின் மீதான மத்திய அரசின் வஞ்சகம் கண்டிக்கத்தக்கது - சு.வெங்கடேசன்
x

கோப்புப்படம்

மெட்ரோ ரெயில் திட்டங்களை 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை இருப்பதாக கூறி மத்திய அரசு நிராகரித்துள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை எம்.பி. வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை இருப்பதாக கூறி மத்திய அரசு நிராகரித்துள்ளது. தமிழகத்தின் மீதான மத்திய அரசின் வஞ்சகம் கண்டிக்கத்தக்கது. குருகிராம், புவனேசுவர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்களின் மக்கள் தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்த போதும், அங்கு மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story