லாட்ஜிக்கு அழைத்து வந்து அடிக்கடி உல்லாசம்; ஒரு கட்டத்தில் வர மறுத்த இளம்பெண்.. ஆத்திரத்தில் வாலிபர் செய்த செயல்

இளம்பெண் தனது பாட்டி இறந்து 3 நாள் தான் ஆகிறது எனக்கூறி லாட்ஜுக்கு வர முடியாது என தெரிவித்து உள்ளார்.
சென்னை,
சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பி.காம் முடித்துள்ளார். இவர் மோஜ் என்ற செயலி மூலமாக நண்பர்களோடு பழகி வந்துள்ளார். அந்த வகையில் லிபின் ராஜ் (வயது 25) என்ற வாலிபர் இளம் பெண்ணுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் செயலி வாயிலாக அறிமுகமாகி உள்ளார். ஆரம்பத்தில் நட்பாக பழகிய லிபின் ராஜ் நாளடைவில் இளம் பெண்ணுக்கு காதல் வலை விரித்துள்ளார். இதில் இளம்பெண் மயங்கிய நிலையில், அவரோடு வீடியோ காலிலும் பேசி உள்ளார். இதுபோன்று வீடியோ காலில் பேசும்போது லிபின் ராஜ் இளம் பெண்ணை ஆபாசமாக புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இளம்பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய லிபின் ராஜ் உன்னை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து வைத்துள்ளேன். நான் சொல்வது போல கேட்காவிட்டால் அந்த புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.இதற்கு பயந்து இளம்பெண் தயது செய்து என்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு விடாதே நீ சொல்வது போல் நான் நடந்து கொள்கிறேன் என கூறி இருக்கிறார்,
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட லிபின் ராஜ் நான் சொல்வது போல பெரியமேடு லாட்ஜுக்கு வந்துவிடு. நாம் இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி உள்ளார். இதற்கு இளம்பெண் தயங்கிய நிலையில் நீ வராவிட்டால் உனது புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன் என மீண்டும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன இளம்பெண் லிபின்ராஜ் கூறியதுபோல் பெரிய மேட்டில் உள்ள லாட்ஜுக்கு சென்றுள்ளார். அப்போது லிபின் ராஜ் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதன்பிறகு கடந்த மாதமும் இதுபோன்று மிரட்டி பெரியமேடு லாட்ஜுக்கு வரவழைத்து இளம்பெண்ணை லிபின் ராஜ் நாசம் செய்துள்ளார். 3-வது முறையாக ஆபாசமாக எடுக்கப்பட்ட இளம்பெண்ணின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்து 2 முறையும் பெரியமேடு லாட்ஜில் வைத்து லிபின் ராஜ் அடிக்கடி உல்லாசமாக இருந்தநிலையில் 3-வது முறையும் துணிச்சலாக இளம்பெண்ணை லாட்ஜுக்கு அழைத்துள்ளார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய லிபின் ராஜ் நான் சொல்வதுபோல இந்த முறையும் வந்துவிடு இல்லை என்றால் நடப்பதே வேறு. உனது புகைப்படங்களை நீ வராவிட்டால் உனது உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். அப்போது இளம்பெண் தனது பாட்டி இறந்து 3 நாள் தான் ஆகிறது எனக்கூறி லாட்ஜுக்கு வர முடியாது என தெரிவித்து உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த லிபின் ராஜ். இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை அவருடைய தாயாரின் செல்போனுக்கு அனுப்பி உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தயார் இது பற்றி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் நம்பிக்கை மோசடி, பாலியல் வன்கொடுமை, மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் லிபின் ராஜின் சொந்த ஊர் கன்னியாகுமரி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் லிபின் ராஜை கைது செய்தனர்.ஆட்டோ டிரைவரான இவர் இதுபோன்று வேறு எந்த பெண்களிடமாவது அத்துமீறி நடந்து கொண்டுள்ளாரா என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.






