தூத்துக்குடி: கொலை, கொலை முயற்சி வழக்குளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த 10 மாதங்களில் மட்டும் 115 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி: கொலை, கொலை முயற்சி வழக்குளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் வெள்ளரிக்காயூரணி பகுதியைச் சேர்ந்த அம்மாமுத்து மகன் மூர்த்திராஜா (வயது 27) மற்றும் குலசேகரன்பட்டினம் காமராஜர் நகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துச்செல்வன்(27) ஆகிய 2 பேரும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் கடந்த 6.10.2025 அன்று நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆவர்.

அதேபோன்று திருச்செந்தூர் தலைவன்வடலி பகுதியைச் சேர்ந்த வேல்சாமி மகன் சூர்யா(23) என்பவர் ஆறுமுகநேரி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆவார்.

மேற்சொன்ன கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் தாடர்புடைய 3 பேரையும் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் நேற்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த 10 மாதங்களில் மட்டும் 115 பேர் குன்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com