தூத்துக்குடி: முன் விரோதத்தில் காரை சேதப்படுத்திய 4 பேர் கைது


தூத்துக்குடி: முன் விரோதத்தில் காரை சேதப்படுத்திய 4 பேர் கைது
x

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கு இடையே நிலப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம் வெள்ளாளன்கோட்டை வடக்குத் தெருவை சேர்ந்த வேலு மகன் கிருஷ்ணசாமி (வயது 70). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகையா மகன் இருளப்பனுக்கும் இடையே நிலப் பிரச்சினை குறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் அக்டோபர் 6ம் தேதி விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்கு பின், கிருஷ்ணசாமி காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தாராம். இருளப்பனின் தூண்டுதலின்பேரில், அவரது உறவினர்கள் காரை வழிமறித்து தாக்கியதில் கார் சேதமடைந்ததாம். இதுகுறித்து கிருஷ்ணசாமி அக்டோபர் 7ம் தேதி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை சேதப்படுத்திய நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மதுரை ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் சாலையைச் சேர்ந்த தங்கம் மகன் வீரபாண்டி(39), அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மணிகண்டன்(25), மதுரை காமராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் கண்ணன்(39), மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் மணிகண்டன்(35) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story