தூத்துக்குடி: பெட்ரோல் ஊற்றி தீ வைத்து முதியவர் கொலை- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை


தூத்துக்குடி: பெட்ரோல் ஊற்றி தீ வைத்து முதியவர் கொலை- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
x

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 26 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கடந்த 2019ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.பி. சித்தன்நகரைச் சேர்ந்த பெருமாள்சாமி மகன் சுப்பையா (வயது 72) என்பவர் சொத்து பிரச்சினை காரணமாக பெட்ரோல் ஊற்றி தீ பற்றவைத்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுப்பையாவின் மகள் மூக்கம்மாள்(58) என்பவரை நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம் நேற்று (1.12.2025) மூக்கமாளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுகாதேவி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் சுதா ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 26 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story