தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
Published on

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் யோனஸ் (வயது 25) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா நேற்று (7.8.2025) குற்றவாளி யோனஸ் என்பவருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதமும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு ரபிலாகுமாரி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் பாராட்டினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com