திருநெல்வேலி: போலீஸ் கமிஷனர், எஸ்.பி. அலுவலகங்களில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு


திருநெல்வேலி: போலீஸ் கமிஷனர், எஸ்.பி. அலுவலகங்களில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
x

தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி

தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் அறிவுறுத்தலின்படி போலீஸ் துணை கமிஷனர்கள் வினோத் சாந்தாராம் (கிழக்கு), விஜயகுமார் (தலைமையிடம்) ஆகியோர் தலைமையில் காவல் துறை அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள், காவலர்கள் ஆகியோர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அப்போது அவர்கள் அனைவரும் "மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும்" கூறி உறுதிமொழி ஏற்றனர்.

இதேபோல் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இன்று வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஏ.டி.எஸ்.பி. (CWC) சண்முகம் தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

1 More update

Next Story