திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x

நெல்லை பேட்டை பகுதியைச் சேர்ந்த வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி, பேட்டை, அசோகர் தெற்கு தெருவில் வசிக்கும் முருகன் மகன் பொன்னரசனை அதே தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் சந்துரு (வயது 19) கருங்காடு ரோடு, ரயில்வே கிராசிங் அருகே கொலை செய்ய முயற்சித்துள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்துரு, திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) கீதா, காவல் உதவி கமிஷனர் (டவுண் சரகம்) அஜுகுமார் மற்றும் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி நேற்று (16.5.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

1 More update

Next Story